சக்தி

Blog post description.

6/17/20261 min read

Malarga Manitham Magazine

January, 2001
Dr. M. Amalavathy


சக்தி!

21ம் நூற்றாண்டில் மாபெரும் ஒரு வார்த்தையாக மக்கள் வாயில் நுழைந்து வெளிவந்து கொண்டிருக் கிறது சக்தி என்ற ஒரு வார்த்தை என்று சொல்லுகின்றது.

எங்கு போனாலும் "சக்தி மையங்கள்", "மனித சக்தி”, “மனித சங்கிலிச் சக்தி", "தெய்வீகச்சக்தி”, ஏன்? - "சக்தி மசாலா, நம் "சக்திமான்" என்று எங்கெங்கு காணினும் சக்தி மயமாக இருப்பதால் என் புத்தியிலும் “சக்தி” பற்றிய ஒரு கேள்வி எழும்பி விட்டது.

சக்தி! சக்தி! என்ன சக்தி இது? இது எங்கிருந்து வருகின்ற என்பது தான் அந்தக் கேள்வி அதிக நேரம் மூளைக்கு வேலை கொடுக்கிற ஒரு பெரிய கேள்வியாக இது மாறி விட்டது.


அறிவியல் எல்லாமே ஒரு சக்திதான். சக்தி செயல்படுகின்றது; செயலாக்கத்திற்குச் சக்தி தேவை என்று சொல்லுகின்றது.

கடவுள் ஒரு எல்லாச் "சூப்பர் சக்தி! சக்தியும் அந்தச் சக்தியிலிருந்துதான் வருகின்றது என்று ஞானம் நம் மனத்திற்கு ஒரு தெளிவை உண்டாக்குகின்றது.

அதே ஞான சக்தியைத் தொடர்ந்து கடவுள் மனிதனுக்கு ன்னென்ன சக்திகளைக் கொடுத்திருக்கின்றார்? மனிதனின் சக்திகள் தாம் எவை எவை? என்று பார்ப்போம்.

மூன்று வகையான சக்திகள் மனிதனை முழுமையாக வாழ
வைக்கின்றன:

1. உடல் சக்தி.

2. மனச் சக்தி.

3. புத்தியின் சக்தி.

1. உடல் சக்தி: நாம் உண்ணும் உணவு சக்தி யாக மாறி உடல் உறுப்புகளைச் செயல்படுத்தி வேலை செய்ய ஆற்றலைத் தருகின்றது.

2. மனச்சக்தி

நம்முடைய ஆன்மீக உடலிலிருந்து வருகின்றது. நாம் செய்யும் பிரார்த்தனைகள், தியானம், யோகாப் பயிற்சிகள், தெய்வ வழிபாடுகள், நம் சுக வாழ்வுக்காக நாம் செய்யும் உடற்பயிற்சிகள், சக்தியாக மாறி நம் ஆன்மீக உடல் வழியாக நம் புற உடலுக்கு வந்து நம் உடல் உறுப்புக்களுக்குச் சக்தியாகவும், மாறி நமக்கு மனத் துணிவைத் தந்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடவும், துன்ப, துயரங்கள் என எது வந்தாலும் எதிர்த்து நிற்கவும் உதவுகின்றது.
தலைநிமிர்ந்து வாழவும்
இது இரண்டும் போகபடைப்பிலேயே கடவுள் நமக்கு மனச் சக்தியும், மன உறுதியும் கொடுத்திருக்கின்றார். ஆம்! நம் மனதையும் உடலையும் சீர்திருத்தி முழு ஆரோக்கிய வாழ்வை வாழ
வைக்க கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தது 100 விழுக்காடு மன உறுதி.

3. புத்தியின் சக்தி :

நாம் சிந்திக்க, செயல்பட, பிரச்சினைகளைத் தீர்க்க,
வாழ்க்கைக் கட்டங்களைத் தாண்டிச் செல்ல உதவுகின்றது புத்தியின் சக்தி.

கடவுள் கொடுத்த இந்தச் சக்தி பலவீனப்படுவது நம் வாழ்க்கைக்கு நாம் முழுப்பொறுப்பு எடுக்காமல் போகும் போது:

"உன்னால் என் வாழ்க்கைக்குப் பல பிரச்சினைகள்..." "நீ மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் நன்றாக இருந்திருப்பேன்..." "எல்லாம் என் தலைவிதி..!"

வைத்திருக்கின்ற இத்தகைய

நாமே நம் தலையில் போட்டு நிபந்தனைகள் நம் மன உறுதியைக் குலைக்கின்றன. நாம் அறியாமலேயே நம் கஷ்டமாகப் ஏனென்றால் இந்தச் சக்தி குறைய

குறைய நமக்கு வலி, துன்பம் நோய் வந்து விடுகின்றது.


வாழ்க்கை மற்றவர்கள் கைக்குப்
போய்விடுகின்றது. பின்னால்
அதை இழுத்துப் பிடிப்பது போய்விடும்.


இந்தச் சக்தியை அதிகப்படுத் துவது சுயக்கட்டுப்பாடும் நலம்
பயக்கும் சிந்தனை அலைகளுமே.
உடல் சக்தியைப் பலவீனப் படுத்துவது நம் உணவு பழக்க வழக்கங்கள். நாக்கு ருசிக்கு அடிமையாவது

பலவீனத்திற்கும், சக்திக்காக சாப்பிடுவது உடல் சக்தியை அதிகப்படுத்துவதற்கும் உதவுகின்றது.

உடல் மனச்சக்தியைப் பலவீனப்
படுத்துவது மனச்சோர்வுகள்!

தீர்க்க முடியாப் பிரச்சினைகள்! வெளியே சொல்ல முடியாத உணர்ச்சிகள்! நம்மிடம் வாழும் தெய்வத்தோடு உறவு வைத்துக் கொள்ளா மனநிலைகள்!

மனச்சக்தியை அதிகப்படுத்த வேண்டுமென்றால் மன்னிக்கும் அன்பில் நாம் வளர வேண்டும். வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளைத் தெய்வம் கூறியது போல சூரியன் மறையும் முன் தீர்க்கும் மனநிலையில் நாம் வளர்ந்திருக்க வேண்டும்.

நான் யார்?" என்ற கேள்வியை அடிக்கடி கடவுளின் முன்னிலையில் கேட்கும் பழக்கத்திற்கு நாம் வந்திருக்க வேண்டும்.

நாமே நம்மை அறிந்துவளர்ந்து வரும் பக்குவத்தில் நம்முள் இருக்கும் தெய்வத்தை உணர்ந்து, உறவு ஏற்படுத்தி, அவரின் குரலுக்குச் செவி சாய்த்து, அவரின் சித்தத்தை உணர்ந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது நம் உடல் சக்தி, மனச்சக்தி, புத்திசக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிகரித்து, முழு நலத்தோடும், மகிழ்ச்சியோடும், அமைதியோடும், அன்போடும் நாம் இந்த மண்ணில் வாழ்ந்து படைத்தவனோடு ஒன்றிக்க நமக்குத் துணைபுரியும். வளர்க நம் சக்திகள்! அதனால் தழைக நம் நலன்கள்!