Manikind Enlightenment love -Tamil

Blog post description.

6/17/20261 min read

ஆசிரியரின் சிந்தனையிலிருந்து...

இன்று நாம் எங்கு சென்றாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லார் வாயிலிருந்தும் வரும் ஒரு சொல் "மனித நேயம்" மனித நேயம், மனித நேயம். இந்த வார்த்தையின் முழுை அர்த்தம் தான் என்ன, என்று நான் பலமுறை சிந்தித்திருக்கிறேன். அகராதிகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த விளக்கத்தையும் தேடி வாசித்தேன். மனித நேயம் இல்லாததன் மூலகாரணம் என்ன என்று தியானித்தபோது தியானத்தில் கிடைத்த சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

நம்முன் இருக்கும் தெய்வீக அன்பு கொழுந்துவிட்டு எரிந்தால் அது நம் உள்ளத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளும், பரிசுத்தமான உள்ளம் இறைவன் தங்கும் ஆலயம். நம் ஆலயத்தில் இறைவன் தங்கினால், இறைவனால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளையும் அதாவது வானத்தையும், பூமியையும் அதனில் அடங்கி உள்ள எல்லா படைப்புகளின் மீதும் நமக்கு அன்பும், மரியாதையும் இருக்கும். ஏனெனில் எல்லாமே மனித குலத்திற்கு அன்பு சேவை செய்து, பயன் அளிப்பவைகளாக இருக்கின்றன. அதனால் எல்லா படைப்புகளையும் மதித்து, அன்பு செய்ய நம் உள்ளம் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த தூண்டுதல் நம் புத்தியில் நேர்முக சிந்தனையை உருவாக்கும். நேர்முக சிந்தனை அன்பில் செயல்பட நம் கைகளையும், கால்களையும் தூண்டும். நம் செயல்கள் எல்லாம் மனித நேய செயல்களாக அமையும். இப்படி வாழ்ந்தால் பின் ஏன் மனித நேயத்தைப்பற்றி பேச வேண்டும்? ! உன்னிடம் மனித நேயம் இல்லை என்று சுட்டிக் காட்டும் பொழுது நம் உள்ளத்திலும் மற்றவர்களின் மீதும் மனித நேயம் இல்லாமல் போகிறதே? இதை நாம் உணர வேண்டும். இன்று எல்லாரும் மனித நேயம் இல்லை என்று பேசுகின்றார்கள் என்றால் எல்லாரும் இழந்தது ஆன்மீக உள்ளம் தாளே? தெய்வம் நம் உள்ளத்தில் இல்லை என்றால், நாம் மனித மிருகம் தானே? யார், யாரை மதிப்பது? அன்பு செய்வது? பின் எல்லாரும் மனித நேயத்தைப் பற்றி சொல்லிக் கொண்டு அலைய வேண்டியது தான்.

மறுசிந்தனைக்கு அழைக்கின்றார் மாஸ்டர் டாங். இழந்ததை மீண்டும் பெற உருவானது தான் "Mankind Enlightenment Love" இதன் அடையாள சின்னத்தை, அட்டைப் படம் விளக்குகின்றது. நாம் திரும்பி நம் ஆன்மீக வாழ்க்கைக்குச் சென்று, தெய்வீக அன்பில் வளர்ந்து - மனிதர்களுக்கு தன்னலமற்ற சேவை செய்து பிரபஞ்ச சக்தியை எல்லா படைப்புகளுக்கும் கொடுத்து மனித நேயத்தை வளர்த்து செயல்பட வைப்பது தான் நம் ஆன்மீக யோகா.

உங்கள் ஆன்மா கடவுளை தேடியதால், கடவுள் இன்று உங்களை தெரிந்து கொண்டார். தேடுவதை நிறுத்தி விடாமல், ஆன்மீக சக்திகளை மேலும் மேலும் வளர்த்து எடுத்து, மனித நேயம் அழிகின்ற இந்த இரண்டு வருடத்திலும் நாம் பிரபஞ்ச சக்தியை இந்த உலகத்திற்கு தொடர்ந்து கொடுத்து, இறைவனின் ஆசீரை உலகத்தில் கொண்டு வந்து, பாதுகாப்பது நம் கடமை. இந்த கருத்தை மாஸ்டர் டாங் மிகவும் வலியுறுத்தி மீண்டும், மீண்டும் கூறினார்கள். அதனால் சேர்ந்து செயல்பட அழைக்கின்றேன்.

MANKIND ENLIGHTENMENT LOVE (MEL)

மாஸ்டரே இந்த அடையாள சின்னத்தை உருவாக்கினார்கள். இதில் இரண்டு வட்டம் உள்ளது. ஒரு வேதாளம், ஒரு Phoenix, மூன்று Triangle-ம் உள்ளது. இதன் Background இனம் பிறை, 1. வெளிப்புறத்தில் உள்ளபெரிய வட்டம் சூரியனையும், உள்புறத்தில் வரும் சிறிய வட்டம் சந்திரனையும் குறிக்கும். இது இரண்டும் சேரும் பொழுது வியட்னாம் மொழியில் ஒளி, பிரகாசம், புத்தி கூர்மை என்று அர்த்தம் உண்டு. அதை வியட்நாம் மொழியில் Minh என்று சொல்லு வார்கள். இங்கு மாஸ்டர் பிரகாசம் என்று சொல்லுகின்றார்கள். ஒருவன் தன் வாழ்க்கை முழுவதும் பிரகாசத்தில் ஜீவித்தால் அவன் ஞானத்தில் வாழ்கிறான் என்று அர்த்தம் ஒரு துறவி ஞானத்தில் வாழ்ந்தால் அவன் ‘நிர்வாணத்தை’ அடைய முடியும். ஒரு சாதாரண மனிதன் ஞானத்தில் வாழ்ந்தால், அவன் கடவுனோடு இணைந்து விட்டான். அதனால் அவன் ஒரே கடவுனை வணங்குவான். ஒரே மனித குலத்தில் அவன் வந்து விடுவான். அப்பொழுது அவன் மனித குலத்தை பிரிக்கின்ற எல்லா வற்றிலிருந்தும் தன்னை மீட்டுக் கொள்வான். மனித குலத்தையே இதற்கு இட்டு செல்வது தான் தமது மாஸ்டரின் குறிக்கோள்.

2.வேதாளம் (The Dragon); நான்கு புனிதமான மிருகத்தில் இது முதல் இடம் பெறுகிறது. Dragon-க்கு நீனமான உடல், ஆனால் தன் உடலை சுருட்டி, மடக்கி மிக வேகத்தில் பறந்து செல்லும். சில சமயம் கடலுக்குள் செல்லுகிறது. சில சமயம் மேகத்தை நோக்கி பறந்து செல்லு கின்றது. சில சமயம் வாளத் திற்கும், பூமிக்கும் நடுக்கத்தை கொடுக்கிறது. இதை ஓவியர்கள் மக்களுக்கு தகுந்தாற் போல வரைகிறார்கள். அதனால் Drigot- யை பல ரூபத்தில் பார்த்தாலும், அவை எல்லாம் ஒன்றே.

ஆனால் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. இதன் உடம்பில் 81 பாகம் இருக்கிறது. நம்பர் கண்ணோட்டத்தில் அதை பார்த்தால் அது 9. 9-வது எண் செழிப்பை குறிக்கிறது. மற்றொரு கண்ணோட்டத்தில் அதைப் பார்த் தால் இது yang குறிக்கிறது. இதன் டெண்ணத்தைப் பார்த்தால் இதற்கு ஐந்து நிறம் உண்டு. கருப்பு, வெள்ளை, புரை, சிவப்பு, தங்கநிறம். இந்த தங்க நிறம் dragon தான் மற்ற நிறம் dragonக்கு தலைமை. இந்த தங்க நிற வேதாளம் நேராக செல்லும். மற்ற நிற வேதானம் நாலு திசையிலும் சுற்றி திரியும், உலகத்தில் மக்கள் கஷ்டப்படும்.

பொழுது இந்த தங்கநிற வேதாளம் வந்தால் மக்களை மீட்க ஒரு 'புனிதமான மனிதன் பிறந்து விட்டான் என்ற அடையாளத்தை அது தருகிறது.

3. பீனிக்ஸ் (The Phoenix): பறவைகளின் ராணி இது. இதன் சிறகுகள் ஐந்து நிறங்களால் ஆனது. வானத்திலிருந்து, பூமிக்கு வந்து தங்கும் பொழுது இது மலையில் பயிரிடப்படும் கோதுமை நிலத்தில் வந்து தங்குகிறது. இது எப்பொழுதும் ஜோடியாகப் பறக்கிறது. ஆண் கூவியதும் பெண் பறவை சேருகிறது. பின் இருவரும் ஜோடியாக பறக்கின்றார்கள். நம் சரித்திரம் கூறுகிறது. இந்த பறவை உலகத்தில் பறந்தால், உலகத்தில் ஒரு நீதிமான் பிறந்து விட்டான் என்பதை குறிக்கிறது. அதனால், இந்த பறவை வந்த உடன் உலகத்தில் உண்மையான, நிம்மதி, மகிழ்ச்சி, தெய்வீக அன்பும், அழகும் அமையும் என்பது பொருள். அதனால் மனிதகுலம் ஆன்ம வழியில் முன்னேறும். இந்த காலகட்டம் மனித சரித்திரத்தில் பொற்காலம் ('The Golden Age) என்று அழைக்கப்படுகிறது.

4. மூன்று பக்க, மூன்று முக்கோணங்கள், Mankind Enlightenment Love மாணவர் களின், ரகசிய சக்தி. இது மும் மூர்த்திகளின் சக்தி. சொத்து தேடுபவர்களுக்கு இது சக்தி தராது. ஆனால் ஞானத்தையும், நிர்வாகச் சிறப்பையும் தேடுபவர்களுக்கு இது வழி காட்டியாக அமைகிறது. இந்த மூன்று பிரமிடுகளுக்கும், மற்றொரு பொருள் என்னவென்றால், வானம், பூமி, மனிதகுலம். பெரிய பிரமிட் வானத்தையும், அதன் உள் இருப்பது பூமியையும், சிறியது மனித குலத்தையும் சுட்டி காட்டு கின்றன. இந்த பிரமிடுக்கு, மூன்று முகமும், மூன்று கோணமும், அவை கூடி மேலே ஒரு கூரிய பாகமும் இருக்கிறது. இந்த மூன்று முகங்களும், உலகத்தில் தோன்றிய புத்தா, கிறிஸ்து, மற்ற புனிதர்களை குறிக்கிறது. மூன்று கோணங்களும் முக்கியமான மூன்று மதத்தின் பிரிவை குறிக்கின்றன. இந்த மூன்று மதங்களும் ஒன்று சேர்ந்து ஒரே கடவுள், ஒரே மனித குலம் என்று குறிப்பது தான் பிரமிடின் உச்சி இதுதான் Mankind Enlightenmen Love - ன் குறிக்கோள்.